பேருந்து வசதி தேவை

Signatures:
  0 (Goal: 50)

Petitioning: பேருந்து வசதி தேவை.நடவடிக்கை எடுக்கப்படுமா?

Petitioner: Rajadurai Selvaraj started on October 23, 2016

கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார் கோயில் வட்டம்,பேரூர் மதுரா மேட்டுக்குப்பம். எங்கள் பகுதியிலிருந்து எண்ணற்ற மாணவர்கள்,இளைஞர்கள் சேலம், திருப்பூர்,கோவை,ஈரோடு,கரூர் பகுதியில் படிப்பு மற்றும் வேலை செய்து வருகிறார்கள்.தினந்தோறும் சிதம்பரத்திலிருந்து வடலூர், நெய்வேலி, விருத்தாசலம் வழியாக சேலம் வரை பல பேருந்துகள் செல்கின்றது. அதில் பகல் மற்றும் இரவு நேரத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு,குமாரக்குடி,பேரூர்,கானூர்,நாச்சியார்ப்பேட்டை, திருமுட்டம் வழியாக புதிய வழித்தடம் துவங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதனால் கீழ்க்கண்ட ஊர் பொதுமக்கள் பயன் பெறுவார்கள். ராஜேந்திரப்பட்டினம், ஆத்துக்குறிச்சி, திருமுட்டம்,நாச்சியார்ப்பேட்டை, கானூர்,சத்தாவட்டம், கூடலையாத்தூர், காவாலக்குடி,முடிகண்டநல்லூர், பேரூர்,வலசக்காடு,சாந்திநகர், மழவராயநல்லூர், குமாரக்குடி ஆகிய ஊர் பொதுமக்கள் பய்ன் பெறுவார்கள். இதனால் பொதுமக்கள் சிரமம் குறையும்.திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.ஆகையால் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.