மூத்த நாத்திகர் டாக்டர் கலைஞர்க்கு ஒரு பகிரங்க கடிதம்.

Signatures:
  0 (Goal: 500,000)

Petitioning: திமுக தேர்தல் அறிக்கை 2016 பக்கம் 112: பத்தி 419

Petitioner: Raja Sekaran started on April 30, 2016

மூத்த நாத்திகர் டாக்டர் கலைஞர்க்கு ஒரு பகிரங்க கடிதம்.

முத்தமிழ் அறிஞர் தமிழகத்தின் மூத்த நாத்திகர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, ஒரு முன்னாள் திருக்கோயில் குமாஸ்தாவின் பகிரங்க கடிதம்.
அய்யா,
உங்கள் தி.மு.க தேர்தல் அறிக்கையின் ஒரு விசயம் குறித்து என் மனசாட்சியின் சில கேள்விகள்.
அதில் கீழ்கண்டவாறு உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை 2016
பக்கம் 112: பத்தி 419
கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு, அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு
பக்கம் 85, பத்தி 295
வக்ப் வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
source: http://www.dmk.in/dmk2016Manifesto_Tamil.pdf
இதில் "வக்ப் வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்க படும்" எனக் குறிப்பிட்டு உள்ளதை வரவேற்கிறேன்.
அதே சமயம், "கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு, அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு" எனக் குறிப்பிட்டு உள்ளதன் மீது எனது மனசாட்சியின் கேள்விகள் .
அவை:
1. கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் கிராமத்தில் தங்கள் பெயரில் " கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்லூரி" என்று தங்களது முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களால் நிறுவப்பட்டு நடப்பதை அறிவீர்களா?
2.தங்கள் பெயரில் அமைந்த அந்தக் கல்லூரியின் அமைவிடம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், முன்னொரு காலத்தில் தாங்கள் பீரங்கி வைத்து பிளக்க ஆசைப்பட்ட தில்லை நடராசருக்கும் சொந்தம் என்பதை அறிவீர்களா?
3.இது உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் நியாயம் இல்லை. தெரியாதிருந்தாலும் நியாயம் இல்லை. ஏனெனில் உங்களது கடந்த ஆட்சியில் தானே அந்த சிவன் சொத்துக்களை, சட்டத்தின் கண்களை கட்டி , அறிவியல் ரீதியாக, விஞ்ஞான பூர்வமாக அபகரிக்கவும், தங்கள் பெயரை வைக்கவும் அனுமதித்தீர்கள்?
4. அருணாசலேஸ்வரர்க்கும், தில்லை நடராசருக்கும் தங்கள் இயக்கத்தினர் இழைத்த அநீதிகளை ஆவண அகழ்வாய்வு செய்து அம்பலப்படுத்தியவன் என்ற முறையில் கேட்கிறேன், சட்டத்தின் கண்களை கட்டலாம். தர்மத்தின் கண்களை கட்ட முடியுமா?
5.தங்களது பெயரை தாங்கி நிற்கும் கல்லூரி அமைவிடம், "இந்தச்சொத்தை எவ்வித வில்லங்க பராதீனத்திற்கும் உட்படுத்தாமல் என்ற " நிபந்தனையுடன் அந்த நிலங்களின் விவசாய வருமானத்திலிருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், தில்லை நடராசருக்கும் தீப ஆராதனை செய்யவும் அச்சிவாலயங்களுக்கு பசியுடன் வரும் சேவார்த்திகளுக்கு அன்னதான சமராதனை செய்யவும் மட்டும் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தம் என்பதை அறிவீர்களா?
6. இந்த நிலங்களை, திரிபுரமதை எரி செய்த சிவன் சொத்துக்களை திட்டமிட்டு பதிவு செய்யப்படாத போலி உயில் மூலம் ஆவணங்களை உருவாக்கி, சட்டத்தின் கண்களை கட்டி , அறிவியல் ரீதியாக, விஞ்ஞான பூர்வமாக அபகரித்தது மட்டுமல்லாமல் தமிழகத்தின் மூத்த நாத்திகரான தங்களது பெயரை உங்கள் அனுமதியில்லாமலும், தங்கள் அறிவுக்கெட்டாமலுமா வைத்து விட்டார்கள்?
7. அப்படியே ஆனாலும் "இந்தச்சொத்தை எவ்வித வில்லங்க பராதீனத்திற்கும் உட்படுத்தாமல்" என்ற நிபந்தனையை அடிப்படையாக் கொண்ட, 100 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட சிவன் கோவில் அறக்கட்டளை கைங்கரியங்களை தடுத்தாட்கொண்டு ஆதார நிலங்களை அபகரித்தது மட்டுமல்ல, தனிச்சொத்தாக்கியது மட்டுமல்ல நீங்கள் செய்தது. வயிற்றுப்பசியுடன் வரும் ஆயிரக்கணக்கான சிவனடியார்களின் அன்னச்சோற்றுக்கான ஆதாரத்தையே அக்கிரம அதர்மத்தால் அபகரித்துள்ளதை மௌனசாட்சியாக இருந்து அங்கீகரித்து உள்ளீர்கள்தானே?
8.இத்தனைக்கு பிறகும் இப்போது தங்கள் திமுக தேர்தல் அறிக்கை 2016-ல் பக்கம் 112: பத்தி 419-ல்
"கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு, அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலைக் குழு" என்று உறுதிமொழி கொடுத்திருப்பது தங்கள் பெயரில் " கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்லூரி" என நடைபெற்று வரும் சொத்தை வாய்ப்பமைந்தால் சத்தமில்லாமல் வரன்முறைப்படுத்திக்
கொள்ளத்தானே அய்யா?
9.அப்படி இல்லை என்றால் , தங்கள் இயக்கத்தின் மேற்குறித்த ஷரத்தின் (உள்) நோக்கம் தான் என்ன அய்யா?
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். அறம் கெடுத்தோர்க்கும் அன்னம் தடுத்தோர்க்கும் எது கூற்றாகும்?
க.ராஜசேகரன், கோவை.
8 90399039 9

Attached Video