ஏரியை தூர்வார வேண்டும்

Signatures:
  0 (Goal: 50)

Petitioning: ஏரியை தூர்வார நடவடிக்கை தேவை.!

Petitioner: Rajadurai Selvaraj started on October 22, 2016

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் மதுரா மேட்டுக்குப்பம் பகுதியில் சின்ன பாண்டியன் ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு பல கிளை வடிகால் வாய்கால் மூலம் தண்ணீர் வந்தது .நம் முன்னோர்கள் இந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்து பல ஏக்கர் நிலம் பயிரிட்டுள்ளனர்.இந்த ஏரி நாளடைவில் தூர்ந்து ஏரியின் நிலப்பரப்பு எதுவரை என்று தெரியாத அளவிற்கு மண்மேடுகளும் முள் புதர்களூம் அடர்ந்து காணப்படுகின்றது.பெருமழை காலங்களில் ஏரியில் உள்ள தண்ணீர் அளவும்,ஏரியை சுற்றியுள்ள தடுப்பணை அளவும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.ஒருவேளை அணையின் அளவை தாண்டினால் ஒன்று ஊருக்குள் தண்ணீர் புகும், மற்றொன்று நிலங்களை வீணாக்கிவிடும்.இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலங்களில் மழைநீர் ஏரியில் நிற்பதற்கு பதிலாக மக்கள் வாழும் பகுதியில் பள்ளங்கண்ட இடங்களில் தேங்கி ஊரை வீணாக்கிவிடும்.தண்ணீர் சேகரிக்காமல் இருந்தால் பின்வரும் காலத்தில் தண்ணீருக்கு திண்டாடும் நிலை வரும்.ஏரியை சீர்செய்து ஆழப்படுத்தினால் பெருமழை பெய்தாலும் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு ஏரி பலப்படுவதோடு பூமியின் வறட்சி போக்கி பல்வேறு நோய்கள் தாக்கப்படுவதை தவிற்கலாம். அதுமட்டுமில்லாமல் சின்ன பாண்டியன் ஏரியிலிருந்து குறிஞ்சிக்குடி பறையங்குளம் வரை வடிகால் வாய்காலும் , காணாமல் போன வடிகால் வாய்கால் அனைத்தும் கண்டறிந்து தூர்வார வேண்டும். அப்படி செய்தால் அதிக மழை நேரத்தில் வடிகால் வழியாக நீர் வெளியேறி வீராணத்திற்கு சென்றுவிடும். ஏரியை சுற்றியுள்ள ஊர்கள் வெள்ளத்திலிருந்து தப்பிக்கும்.
ஆகையால் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே இந்த ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.